search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநிலை பாதிப்பு"

    மதுக்கூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.

    வி‌ஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.

    இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    களக்காடு அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பட்டதாரி பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் மருதையா. விவசாயி. இவரது மகள் முப்பிடாதி என்ற உஷா (25) இவர் பி.காம் படித்துள்ளார். காவல்கிணற்றில் உள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. 

    இதற்காக உஷா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தினசரி மருந்துகளும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை உஷாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருதையா காவல்கிணற்றில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று காலை உஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்தார். 

    உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை மருதையா களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு சப்- இன்ஸ் பெக்டர்கள் லிபிபாரல்ராஜ், அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    காஞ்சீபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் (வயது 21). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இவர் அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளை தட்டி வந்தார். மேலும் அவ்வழியே செல்பவர்களிடமும் சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜன், பக்கத்து தெருவில் வசிக்கும் தொழிலாளி வேலாயுதம் என்பவரது வீட்டை தட்டி கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் அருகில் கிடந்த கட்டையால் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜன் இறந்தது பற்றி அறிந்ததும் வேலாயுதம் தப்பி ஓடி விட்டார். அவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    மனநிலை பாதிக்கப்பட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பாண்டியம்மாள்(வயது 40). இவர் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றாலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 43). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயின்போ நகரில் மின்துறை ஊழியர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி. இவர் புதுவை மின்துறையில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கலைச்செல்வியை பார்பதற்காக அவரது அண்ணன் சண்முகம் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சண்முகம் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கலைச்செல்வி மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து கலைச்செல்வியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைச்செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மனநிலை பாதிப்பால் கலைச்செல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ×